Skip to main content
"உள்ளுக்குள் புயல்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"உள்ளுக்குள் புயல்" - வெளியில் நிதானமாகத் தோன்றிய விளையாட்டாளர்

வாசிப்புநேரம் -
துருக்கியேவின் குறிசுடும் வீரர் யூஸோஃப் டிக்கேச் (Yusuf Dikec) பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது நிதானமாகப் போட்டியிட்டது பலரின் கவனத்தை ஈர்த்தது.

ஆனால் தமக்குள் வேறோர் உணர்வு இருந்ததாக டிக்கேச் குறிப்பிட்டார்.

அவர் மிகவும் சாதாரணமாக ஒரு கையைக் காற்சட்டைப் பையில் வைத்துக்கொண்டு மற்றொரு கையில் துப்பாக்கியைப் பிடித்திருந்தார்.

அது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் 51 வயது டிக்கேச்.

"எல்லாரும் நான் நிதானமாக இருந்தேன் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் என்னுள் புயல் அடித்துக்கொண்டிருந்தது" என்று அவர் கூறியதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

தம்முடைய பாணி ஒலிம்பிக் விழுமியங்களைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நியாயமான விளையாட்டு, தெளிவு, சாதாரணமாக இருப்பது போன்றவை அவற்றுள் அடங்கும். அவையே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தன என்றார் டிக்கேச்.
ஆதாரம் : Others/BBC

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்