Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெட்டிக்குள் நுழைந்து விமானப் பயணம் மேற்கொள்ள முயன்ற பூனை!

வாசிப்புநேரம் -
பெட்டிக்குள் நுழைந்து விமானப் பயணம் மேற்கொள்ள முயன்ற பூனை!

(படம்: Twitter/TSA)

விலங்குகளைக் கடத்தும் பல முயற்சிகள் விமான நிலைய அதிகாரிகளால் முறியடிக்கப்படுவதுண்டு.

அப்படித்தான் நியூயார்க்கிலுள்ள விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு பெட்டிக்குள் விலங்கு அடையாளம் காணப்பட்டது.

பெட்டியைத் திறந்து பார்த்தால் அதற்குள் ஒரு பூனை உயிருடன் இருப்பது தெரியவந்தது...

பூனை தன்னுடைய உரிமையாளருக்குத் தெரியாமலேயே பெட்டிக்குள் நுழைந்ததாக The Washington Post செய்தி நிறுவனம் சொன்னது.

சம்பவம் இம்மாதம் 16ஆம் தேதி நடந்தது.

பூனை கண்டுபிடிக்கப்பட்ட பெட்டியின் உரிமையாளரை அடையாளம் கண்ட அதிகாரிகள் அவரைத் தொடர்புகொண்டனர்.

பூனை தமக்குச் சொந்தமானது இல்லை என்றும் வீட்டில் சேர்ந்து வசிக்கும் இன்னொருவருடையது என்றும் அவர் சொன்னார்.

பூனை பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் ஆடவர் தம்முடைய விமானத்தைத் தவறவிடவேண்டியிருந்ததாகக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட இன்னொரு சம்பவத்திலும் உரிமையாளர்களுக்குத் தெரியாமலேயே ஒரு நாய் உடைமைகளுக்குள் நுழைந்தது.

ஒரு பை அளவுக்கு மீறிய எடையைக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த பிறகே நாய் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்