Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கப்பலின் சுக்கானில் அமர்ந்தவாறு மூவர் 11 நாள் பயணம்

வாசிப்புநேரம் -
கப்பலின் சுக்கானில் அமர்ந்தவாறு மூவர் 11 நாள் பயணம்

(படம்: Salvamento Maritimo via AP)

நைஜீரியாவிலிருந்து (Nigeria) புறப்பட்ட கப்பலின் சுக்கானில் அமர்ந்தவாறு 11 நாள்கள் பயணம் மேற்கொண்ட மூவர் ஸ்பெயினின் Canary Islands வட்டாரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாடு திரும்பவேண்டும் என்று உள்ளூர்க் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

183 மீட்டர் நீளமுள்ள Alithini II எனும் கப்பலின் சுக்கானில் சட்டவிரோதக் குடியேறிகள் அமர்ந்திருப்பதைக் காட்டும் படம் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.

கப்பலில் இம்மாதம் 17ஆம் தேதி  புறப்பட்ட அவர்கள் தண்ணீர்ப் பற்றாக்குறை, குறைவான உடல் வெப்பநிலை (Hypothermia) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஒருவர் மோசமான நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டுச் சட்டப்படி சட்டவிரோதமான குடியேறிகள் உடனடியாக நாடு திரும்பவேண்டும். 

இருப்பினும் அவர்கள் அகதிக்கான தகுதியைப் பெற்றால் ஸ்பெயினில் இருப்பது சாத்தியம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

- Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்