"ஹோர்முஸ் நீரிணையில் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை மடக்கும்"
(படம்: Alex Brandon / POOL / AFP)
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் எல்லாக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை மடக்கும் என்று கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 10 மணி முதல் முற்றுகை நடப்புக்கு வரும் என்று அமெரிக்க மத்தியத் தளபத்தியம் குறிப்பிட்டது.
பெரிய அளவில் இடையூறுகள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
சீனா, இந்தியா, பாகிஸ்தான், தாய்லந்து, மலேசியா போன்ற நாடுகளின் கப்பல்கள் இதுவரை அனுமதிக்கப்பட்டன. இனி அவையும் தடுக்கப்படலாம்.
வர்த்தக விநியோகம் மேலும் தடைபடும். உலகெங்கும் பொருளாதார அதிர்வுகள் கடுமையாகும் என்று அஞ்சப்படுகிறது.
தமது Truth Social சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட மற்றொரு குறிப்பில் அதிபர் டிரம்ப், ஈரான் அணுவாயுத லட்சியத்தைக் கைவிடத் தவறியதால்தான் பேச்சு தோல்வி அடைந்தது என்றார்.
ஹோர்முஸ் நீரிணைக்கு ராணுவக் கப்பல்கள் வந்தால் அது சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரானிய ராணுவம் எச்சரித்தது.
அது கடுமையாகக் கையாளப்படும் என்றும் பதற்றம் மோசமடையும் அபாயம் உள்ளது என்றும் அது கூறியது.