விண்வெளியில் 9 மாதம் சிக்கியிருந்த வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்

AP Photo/Chris O’Meara, File
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதத்திற்கும் மேல் இருந்த வீரர்கள் இருவர் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.




அடுத்த சில நாள்களுக்கு வீரர்களுக்குச் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்படும்.
அதன் பின் அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர்.
சுனிதாவும் வில்மோரும் போயிங் Starliner விண்கலத்தைச் சோதனை செய்ய சென்ற ஆண்டு ஜூன் மாதம் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.

திட்டமிட்டது எட்டே நாள்.
விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் உடனே திரும்பமுடியவில்லை.