Skip to main content
"கேரளாவை விட்டுச்செல்ல மனமில்லை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"கேரளாவை விட்டுச்செல்ல மனமில்லை" - இந்தியாவில் கேலி செய்யப்படும் பிரிட்டிஷ் விமானம்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சுமார் 20 நாள்களுக்கு முன்னர் தரையிறங்கிய பிரிட்டனின் கடற்படை விமானம் இன்னும் அங்கிருந்து நகராமல் இருப்பது இந்தியர்களைக் கேலி செய்ய வைத்திருக்கிறது.

கடந்த மாதம் அவசர நிலையில் தரையிறங்கிய விமானம் இன்னும் புறப்படவில்லை.

சிலர் அதை அபிமான சுற்றுலாப் பயணியாகக் கருதுகிறார்கள்; சிலர் அதை இந்திய குடிமகனாகவே கருதுகின்றனர்.

இதையொட்டி இணையவாசிகள் பல பகடிப்படங்களைப் (memes) பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக விமானத்தின் படம் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரத்யேக இந்திய அடையாள அட்டை பலரையும் நகைப்பில் ஆழ்த்தியது.

டில்லி போன்ற நகரங்களில் இது நிறுத்தப்பட்டிருந்தால் உள்ளே உணவகம் திறந்திருப்பார்கள் என்றும் சிலர் கேலி செய்தனர்.

கேரளச் சுற்றுலாத் துறையின் அதிகாரபூர்வ X தளத்திலும் பகடிப்படம் பகிரப்பட்டது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்