Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பட்டினி கிடக்கும் திமிங்கிலம்... அதைக் காப்பாற்றும் நம்பிக்கை குறைந்துவிட்டது

வாசிப்புநேரம் -

பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸிலுள்ள ஆற்றில் சிக்கியுள்ள பெலுகா (beluga) வகைத் திமிங்கிலத்தைக் காப்பாற்றமுடியும் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது. 

சென்ற செவ்வாய்க்கிழமையன்று ஆங்கில நீரிணையின்வழியே  பாரிஸிலுள்ள சியேன் (Seine) ஆற்றிற்கு நீந்திச்சென்ற அந்தத் திமிங்கிலம் முதன்முறையாகத் தென்பட்டது. சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து அது ஆற்றின் இரு இடங்களுக்கு இடையில் சிக்கியுள்ளது. 

அதனை நீரோட்டமற்ற அதிக வெப்பமுள்ள ஆற்றில் விட்டுவிடமுடியாது என்பதால் அதனையடுத்த ஓரிரு நாள்களில் அங்கிருந்து இடமாற்றியே ஆகவேண்டும் என்று கருதப்படுகிறது.

அந்தத் திமிங்கிலத்தின் உடல் மெலிந்து காணப்பட்டதால் நிபுணர்கள் அது உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று தெரிவித்தனர். 

அந்த திமிங்கிலத்துக்குத் தானாகவே கடலுக்குத் திரும்பும் இயல்பும் இல்லை என்று நம்பப்படுகிறது. அதனைப் படகில் கட்டி கடல்வரை இழுத்துச் செல்வதும் ஆபத்தானது. 

அந்தத் திமிங்கிலத்தைக் காப்பாற்ற வேறெந்த வழியும் இல்லை என்றாலும் அதனைக் கருணைக்கொலை செய்வதை மீட்பாளர்கள் மறுத்துவிட்டனர். 

தற்போது பிறர் அழைக்கும்போது அந்தத் திமிங்கிலம் தலையைத் திருப்புவதாகவும் உணவு அளிக்கும்போது அதைத் தின்ன மறுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்