Skip to main content
ஜார்க்கண்ட்டில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜார்க்கண்ட்டில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்

வாசிப்புநேரம் -
ஜார்க்கண்ட்டில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்

படம்: Rajesh KUMAR / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் ஜார்க்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் மாணவர்கள் போராட்டத்தைத் தீவிரமாக்கத் திட்டமிடுகின்றனர்.

தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தம்
கொண்டுவர வேண்டும் என்று
அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மாணவர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப் போவதாக மாணவர்கள் கூறினர்.

அரசாங்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சுயேச்சை விசாரணை, கூடுதலான வெளிப்படைத்தன்மை ஆகியவை-தேவை என்கின்றனர் மாணவர்கள்.

மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டதாக மாநில அரசாங்கம் கூறுகிறது.

மேலும் ஆலோசனை நடத்தத் தயார் என்றும் அது சொன்னது.

இந்நிலையில், தொண்டூழியர்கள் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உணவும், மருத்துவ சிகிச்சையும் வழங்கி வருகின்றனர்.

மாணவர்கள்மீது காவல்துறையினர் படைபலத்தைப் பயன்படுத்தியதாக இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனாதாக் கட்சி விமர்சித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அது எதிர்த்தரப்பில் உள்ளது.

மாநிலத்தை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மாணவர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி, அவர்களின் அக்கறைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்