Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிள்ளைக்குப் படிக்கத் தெரியாததால் ஆத்திரம்... பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை

வாசிப்புநேரம் -
பிள்ளைக்குப் படிக்கத் தெரியாததால் ஆத்திரம்... பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தமது பிள்ளைக்கு இன்னும் படிக்கவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரியவில்லை...

ஆத்திரமடைந்தார் தந்தை...

பள்ளி வளாகத்தில் நின்று இரண்டு முறை வானத்தை நோக்கிச் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்தின் சிக்கியூ (Sikhiu) வட்டாரத்தில் உள்ள பான் நா டி (Ban Na Di) எனும் பள்ளியில் நடந்த அந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

54 வயது மனச்சாய் சாந்தசோம் (Manachai Chanthasom) தம் பிள்ளையை அழைத்துச் செல்ல பள்ளிக்குச் சென்றிருந்தார். 

அப்போது பிள்ளையின் ஆசிரியருடன் மனச்சாய் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அவர் மதுபோதையில் துப்பாக்கியை எடுத்துச் சுட்டதாக நம்பப்படுகிறது. 

பிறகு அவர் தம் லாரியில் தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. 

காவல்துறை அவரைக் கைது செய்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்ததாக Bangkok Post செய்தித்தளம் தெரிவித்தது. 

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, உரிய காரணமின்றிப் பொது இடத்துக்குத் துப்பாக்கி எடுத்துச் சென்றது, மதுபோதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
 

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்