Skip to main content
'வீட்டுப்பாடத்தைச்' சாப்பிடும் மாணவர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

'வீட்டுப்பாடத்தைச்' சாப்பிடும் மாணவர்கள்

வாசிப்புநேரம் -
 'வீட்டுப்பாடத்தைச்' சாப்பிடும் மாணவர்கள்
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவில் மாணவர்கள் இடையே ஒரு புதிய வகை தின்பண்டம் பிரபலமாகிறது.

'வீட்டுப்பாடம்' என்று அழைக்கப்படும் அந்தத் தின்பண்டம் அரிசி மாவில் செய்யப்படுகிறது.

அது பாடப்புத்தகம், அகராதி உள்ளிட்டவற்றைப் போல காட்சியளிக்கும்.

தின்பண்டத்தை இணையத்தில் சொற்ப விலைக்கு வாங்கலாம்.

அதைச் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

தின்பண்டத்தை உண்ணும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறலாம் என்றும் விற்பனையாளர்கள் சிலர் கூறினர்.

இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுந்துள்ளது.

பிள்ளைகள் தின்பண்டத்தைச் சமூக ஊடகத்தில் பார்த்துவிட்டு அதை வாங்கித் தரும்படி கேட்பதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

பிற தின்பண்டங்களைவிட 'வீட்டுப்பாடம்' ஆரோக்கியமானது என்று பெற்றோர் சிலர் கருதுவதாக South China Morning Post குறிப்பிட்டது.

ஆனால் பிள்ளைகள் தின்பண்டத்தை அதிக அளவில் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர் ஒருவர் எச்சரித்தார்.

தொழில்துறையில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள் பண்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் பிள்ளைகளின் கல்லீரலும் சிறுநீரகமும் செயலிழக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்