Skip to main content
இந்தியாவில் மாணவர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவில் மாணவர் மரணம் - 5 பேர் கைது

வாசிப்புநேரம் -
இந்தியாவில் மாணவர் மரணம் - 5 பேர் கைது

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு சகோதரர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஞ்சல், மைக்கல் சக்மா இருவரும் திரிபுரா மாநிலத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் டெராடூன் நகருக்குப் படிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இருவரும் டிசம்பர் 9ஆம் தேதி சந்தைக்குச் சென்றபோது ஒரு கும்பல் அவர்களை மடக்கித் தாக்கியதாக பிபிசி கூறுகிறது.

கும்பலைச் சேர்ந்தவர்கள் சகோதரர்கள் இருவரையும் தரக்குறைவாகப் பேசியதாகவும் அதனைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

அஞ்சல், மைக்கல் இருவரும் வெட்டுக்காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மைக்கல் உயிர்பிழைத்துக் கொண்டார், அஞ்சல் 17 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் மாண்டார்.

அந்தச் சம்பவத்தால் சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக பிபிசி சொல்கிறது.

அது இனவாத மோதல் என்று கூறப்படுவதைக் காவல்துறையினர் மறுக்கின்றனர்.

ஆதாரம் : Others/BBC

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்