Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'சிறப்புப் பிரதிநிதியை மாற்றுங்கள்'- சுடான் ராணுவத் தலைவர் கோரிக்கை

வாசிப்புநேரம் -
'சிறப்புப் பிரதிநிதியை மாற்றுங்கள்'- சுடான் ராணுவத் தலைவர் கோரிக்கை

(படம்: AFP)

சுடானுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன சிறப்புப் பிரதிநிதி வால்கர் பேர்டெஸ்ஸை (Volker Perthes)மாற்றும்படி நாட்டின் ராணுவத் தலைவர் கோரியிருக்கிறார்.

அந்தத் திடீர் கோரிக்கைக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.

திரு. பேர்டெஸ் 2021ஆம் ஆண்டு சுடானுக்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

சுடான் ஜனநாயக ஆட்சி முறைக்கு மாற அவர் எடுத்த முயற்சிகள் நாட்டின் ராணுவத்தைச் சேர்ந்த சிலருக்குப் பிடிக்கவில்லை.

இந்நிலையில் தலைநகர் கார்தூமின் பல இடங்களில் அத்தியாவசியச் சேவைகள் செயலிழந்து போயிருக்கின்றன.

அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையால் மக்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்