ஆட்டங்கண்ட ஏர் இந்தியா - விமானியிடம் போதைப்பொருள் சோதனை
Reuters
This audio is generated by an AI tool.
நடுவானில் ஆட்டங்கண்ட ஏர் இந்தியா (Air India) விமானத்தின் விமானியிடம் போதைப்பொருள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் புக்கெட்டிலிருந்து புறப்பட்ட விமானம் திடீரென்று சுமார் 90 மீட்டர் இறங்கியது.
பின்னர் நிலைப்பட்ட விமானம் புது டில்லியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
17 பேர் காயமுற்றனர்.
சம்பவம் எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய விமானிகளிடம் போதைப்பொருள் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் என்ன தெரியவந்தது என்பதை அதிகாரிகள் கூறவில்லை.
முடிவுகளை உறுதிசெய்ய மேலும் ஒரு சோதனை மேற்கொள்ளவேண்டும் என்று இந்தியாவின் விமானப் போக்குவரத்து அமைச்சு கூறியது.
ஆய்வுக்கூடத்துக்குச் சோதனை மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அது சொன்னது.
தனது விமானிகளிடமும் சிப்பந்திகளிடமும் போதைப்பொருள் சோதனை வழக்கமாக மேற்கொள்வதுண்டு என்று ஏர் இந்தியா கூறியது.
அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்கவுள்ளதாக அது தெரிவித்தது.