கோலாலம்பூர் இலகுரக ரயிலில் வெடிப்புச் சத்தங்கள் - பீதியடைந்த பயணிகள்
வாசிப்புநேரம் -

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இலகுரக (LRT) ரயிலில் வெடிப்புச் சத்தம் கேட்டுப் பயணிகள் பீதியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வெடிப்புச் சத்தம் கேட்டதும் ஓட்டுநர் திடீரென்று ரயிலை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ந்ததாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.
சம்பவம் நேற்றிரவு (12 மார்ச்) சுமார் 10.30 மணியளவில் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
ரயிலில் இருந்த பயணிகள் வெளியேற முயன்றபோது மீண்டும் வெடிப்புச் சத்தம் கேட்டது. அது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து Rapid KL நிறுவனம் நேற்றிரவு சுமார் 11.20 மணிக்கு அதன் Facebook பக்கத்தில் தகவல் வெளியிட்டது.
தொழில்நுட்பக் கோளாற்றின் காரணமாகச் சில ரயில் சேவைகள் தாமதமடைந்ததாகவும் சம்பவத்தின் தொடர்பில் மாற்று ரயில் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
சத்தம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
வதந்திகளைப் பரப்பவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

ஆதாரம் : Others