Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுஹார்த்தோ தேசிய வீரர் என்று அறிவிப்பு

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுஹார்த்தோ தேசிய வீரர் என்று அறிவிப்பு
கோப்புப் படம்: AFP
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுஹார்த்தோவுக்கு (Suharto) நாட்டின் தேசிய வீரர் என்று பெயர்சூட்டப்பட்டிருக்கிறது.

ஜனநாயக ஆதரவாளர்களும் சுஹார்த்தோ ஆட்சியின்போது அவதியுற்றோரின் குடும்பத்தாரும் அவ்வாறு செய்வதற்கு முன்னதாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

தேசிய வீரர் விருது விழாவுக்கு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) தலைமை தாங்கினார்.

திரு சுஹார்த்தோவின் முன்னாள் மருமகனான திரு பிரபோவோ அவரை வெளிப்படையாகப் பாராட்டிப் பேசினார்.

திரு சுஹார்த்தோ கிட்டத்தட்ட 32 ஆண்டாக இந்தோனேசியாவில் அடக்குமுறை ஆட்சி புரிந்தார்.

மனித உரிமை மீறல்கள், ஊழல், உறவினர்களுக்குச் சலுகை அளித்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களால் அவர் 1998ஆம் ஆண்டு பதவி விலகினார்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்