Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கத் தீவான குவாமைத் தாக்கியது 'மாவார்' சூறாவளி

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் தீவுப் பகுதியான குவாமை (Guam) மாவார் (Mawar) சூறாவளி தாக்கியது.

சூறாவளி கனத்த மழையையும் பலத்த காற்றையும் கொண்டுவந்தது. அதனால் மின்கம்பங்களும் மரங்களும் சாய்ந்தன. வீடுகள் சேதமடைந்தன. குறைந்தது 8 பேர் மீட்கப்பட்டனர்.

வடமேற்குப் பகுதி நோக்கி நகரும் மாவார் சூறாவளி, நிலச்சரிவுகளையும் திடீர் வெள்ளத்தையும் ஏற்படுத்தக்கூடும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புயலையும் அது கொண்டுவரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே குடியிருப்பாளர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குவாமுக்கு நெருக்கடிநிலையை அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ( Joe Biden) ஒப்புதல் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்தின் உதவிகளை அவர் அங்கீகரித்துள்ளார்.

மத்திய நெருக்கடிக்கால நிர்வாக அமைப்பும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவும் நோக்கில் அதிகாரிகளை அனுப்பியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அந்த வட்டாரத்தை உலுக்கிய மிக வலுவான சூறாவளி அது என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்