Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சொந்தமாகக் கால்களைத் துண்டித்துக்கொண்ட அறுவைச் சிகிச்சை நிபுணருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரிட்டனில் காப்புறுதி மோசடி செய்து, ஆபாசப் படங்களை வைத்திருந்த அறுவைச் சிகிச்சை நிபுணருக்கு 2 ஆண்டு 8 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

49 வயது அறுவை சிகிச்சை நிபுணர் நீல் ஹோப்பர் (Neil Hopper) காப்புறுதி அதிகாரிகளிடம் தொற்றின் காரணமாகக் கால்களை இழந்ததாகப் பொய் சொல்லியிருந்தார். 

ஆனால் அவர் சொந்தமாகத் தமது கால்களைத் துண்டித்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. 

BBC நிறுவனம் அது குறித்து செய்தி அறிக்கை வெளியிட்டிருந்தது. 

ஐஸ்கட்டிகளையும் உலர்ந்த ஐஸ் கட்டிகளையும் கொண்டு தமது கால்களை உறையவைத்து பின் அவர் துண்டித்துக்கொண்டதாக வழக்கறிஞர் கூறினார். 

மொத்தத்தில் அவர் காப்புறுதியில் 460,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை (சுமார் 797,000 வெள்ளி) மோசடி செய்ததாக BBC சொன்னது. 

மேலும் அவர் அறுவைச் சிகிச்சையை மையமாகக் கொண்ட ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அவர் மருத்துவராகப் பணிபுரிந்தபோது நோயாளிகளின் பராமரிப்பைப் பற்றி எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. அவர் வேலை பார்த்த மருத்துவமனை வேலையில் அவருடைய நடத்தை ஒழுங்காகத் தான் இருந்தது என்று கூறியிருக்கிறது.

இருப்பினும் அவர் நோயாளிகளை எவ்வாறு கவனித்தார் என்பதை இப்போது விசாரிக்கவேண்டும் என்று சில வழக்கறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆதாரம் : Others/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்