Skip to main content
இந்தோனேசியக் கப்பல் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசியக் கப்பல் விபத்து - 3 நாள்கள் கடலில் மிதந்த 7 வயதுச் சிறுமி உட்பட 5 பேர் மீட்பு

வாசிப்புநேரம் -
இந்தோனேசியக் கப்பல் விபத்து - 3 நாள்கள் கடலில் மிதந்த 7 வயதுச் சிறுமி உட்பட 5 பேர் மீட்பு

படம்: Makassar SAR Office via AP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கிழக்கு இந்தோனேசியாவுக்கு அப்பால் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து தப்பிய ஏழு வயதுச் சிறுமி உட்பட ஐவர் மீட்கப்பட்டுள்ளனர்.

மூன்று நாள்கள் கடலில் மிதந்துகொண்டிருந்த அந்த ஐவரும் உள்ளூர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்.

மீனவர்கள் உதவிக்காக அதிகாரிகளுக்கு வானொலி மூலம் தகவல் அனுப்பியிருந்தனர்.

78 பேரை ஏற்றிச்சென்ற கப்பல் சுலாவெசிக்கு (Sulawesi) அருகே இருந்த சிறிய தீவு ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தபோது மூழ்கியது.

கப்பலிலிருந்து தப்பியவர்கள் பிளாஸ்டிக் கலன்கள், கார்க் (Cork) ஆகிய பொருள்களைக் கயிற்றால் கட்டி ஒரு மிதவையை உருவாக்கியிருந்தனர்.

பல நாள்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் இருந்த அந்த ஐவரும் நொறுக்குத் தீனி, திடீர் நூடல்ஸ் (instant noodles) ஆகியவற்றைச் சாப்பிட்டுப் பிழைத்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் களைப்பாகவும் பலவீனமாய் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

காணாமல் போனவர்களைத் தேட ஐந்து பெரிய கப்பல்கள், ஓர் உளவு விமானம், ஒரு ஹெலிகாப்டர் முதலியவை பயன்படுத்தப்படுகின்றன.


 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்