Skip to main content
ஆஸ்திரேலியாவில் காணாமல் போன 4 வயதுச் சிறுவன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆஸ்திரேலியாவில் காணாமல் போன 4 வயதுச் சிறுவன் - சந்தேக நபர் அடையாளம்

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் 4 வயதுச் சிறுவன் காணாமல் போனது தொடர்பில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தென் ஆஸ்திரேலியாவில் யுன்டா என்ற பகுதிக்கு அருகே சென்ற ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் கஸ் லேமன்ட் (Gus Lamont) காணாமல்போனதாக பிபிசி (BBC) செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அப்போது அந்தச் சிறுவன் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

தேடல் பணிகள் தீவிரமாக நடைபெற்றும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது அதே வீட்டில் வசிக்கும் ஒருவர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றது பிபிசி.

வீட்டிலிருந்து ஒரு வாகனம், மோட்டார்சைக்கிள், சில மின்சாரச் சாதனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சிறுவனின் பெற்றோரைச் சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை வலியுறுத்தியது.

கஸ் காணாமல்போனது குறித்து ஒரு தீர்வு கிடைக்கும்வரை மும்முரமாக விசாரணை நடத்தப்படும் என்று அது கூறியது.

கஸ்ஸைக் கண்டுபிடித்துப் பெற்றோரிடம் திருப்பி ஒப்படைப்பதே நோக்கம் என்றும் அது குறிப்பிட்டது.
ஆதாரம் : Others/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்