இந்தோனேசியாவில் போர்க்கால வெடிகுண்டு வெடித்து 5 பேர் பலி
Unsplash/Jeff Kingma
இந்தோனேசியாவில் போர்க்கால வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் மாண்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
19 பேர் காயமுற்றனர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சம்பவம் நேற்று (மே 31) இந்தோனேசியாவின் கிழக்கிலிருக்கும் பாப்புவா பகுதியில் நடந்தது.
அந்த ஆயுதம் இரண்டாம் உலகப் போர்க்காலத்தின்போது இந்தோனேசியாவில் வெடிக்காமல் விடுபட்டுப்போனது என்று நம்பப்படுகிறது.
மொத்தம் 9 வீடுகள் அழிந்துவிட்டன.
3 பேரை இன்னும் காணவில்லை. சில உடற்பாகங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை அடையாளம் காணும் பணி நடந்துகொண்டிருப்பதாகவும் காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.
தேடல் பணியும் விசாரணையும் முடிந்த பின்னர் மேற்கொண்டு தகவல்கள் வெளியிடப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.
சென்ற ஆண்டு பழைய வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டபோது அவை வெடித்தன. அந்தச் சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் மாண்டனர்.