Skip to main content
கடிகாரம் வாங்க உலகெங்கும் அலைமோதிய கூட்டம்... சிங்கப்பூரிலும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

கடிகாரம் வாங்க உலகெங்கும் அலைமோதிய கூட்டம்... சிங்கப்பூரிலும்

வாசிப்புநேரம் -
கடிகாரம் வாங்க உலகெங்கும் அலைமோதிய கூட்டம்... சிங்கப்பூரிலும்

(படம்: Swatch)

Swatchஇன் புதிய கடிகாரம்....

அதை வாங்க உலகெங்கும் கடைகளில் கூட்டம்.

பிரான்சில் கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல் அதிகாரிகள் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.

சிங்கப்பூரில் கடையை மூடிவிடும் நிலை ஏற்பட்டது.

நேற்று (16 மே) VivoCity கடைத்தொகுதியில் உள்ள Swatch கடிகாரக் கடையில் அந்த நிலை

Swatch சுவிட்சர்லந்தைச் சேர்ந்த Audemars Piguet எனும் நிறுவனத்துடன் சேர்ந்து Royal Pop எனும் புதிய கடிகாரத்தை அறிமுகம் செய்தது.

Audemars Pigueஇன் கடிகாரத்துக்குப் பொதுவாக ஆயிரக்கணக்கில் செலவாகும்.

புதிய கடிகாரம் சுமார் 500 வெள்ளி முதல் விலைபோகிறது.

அதன் சற்று மலிவான விலை அதிகக் கவனத்தை ஈர்த்திருப்பதாகத் தெரிகிறது.

சிங்கப்பூர் உட்பட பாரிஸ், நியூயார்க், மிலான், லண்டன் ஆகியவற்றில் உள்ள Swatch கடைகளில் முந்தைய இரவிலிருந்தே கூட்டம்.

பாரிஸில் சுமார் 300 பேர் கூடினர்.

மக்கள் மோதிக்கொண்டதில் சில இடங்களில் சண்டையும் ஏற்பட்டது.

கடையின் நுழைவாயில் கதவுகள் சேதமடைந்தன.

லண்டனில் 6 கடைகள் மூடப்படவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களை அமைதிகாக்கும்படி Swatch நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்