மனைவியை 120 ஆடவர்களிடம் விற்றதாகக் கணவர்மீது குற்றச்சாட்டு
படம்: Reuters
This audio is generated by an AI tool.
சுவீடனில் ஆடவர் ஒருவர் அவரின் மனைவியைக் கட்டாயப்படுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்ததாய் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
சுமார் 120 பேரிடம் பணத்துக்காக மனைவியை விற்றதாக அவரின்மேல் குற்றம்சுமத்தப்பட்டிருக்கிறது.
62 வயது ஆடவர் இணையத்தில் அதற்காக விளம்பரம் செய்ததாகவும் பிறருக்கும் தம் மனைவிக்கும் இடையே சந்திப்புகளை ஏற்பாடு செய்ததாகவும் காவல்துறை கூறியது.
மனைவி போதைப்பொருளுக்கு அடிமை. அதனைச் சாதகமாகப் பயன்படுத்தியும் மிரட்டியும் மனைவியை அடிபணியச் செய்ததாய் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் மேலும் 26 பேர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
பெண் வேண்டாம் என்று கூறியும் ஆடவர்கள் அவரிடம் அத்துமீறி நடந்ததாய் வழக்கறிஞர்கள் கூறினர்.
குற்றச்சாட்டுகளைப் பெண்ணின் கணவர் மறுத்திருக்கிறார்.
வழக்கு விசாரணை ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கும்.