Skip to main content
சுவீடன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுவீடன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 11 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
சுவீடன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 11 பேர் மரணம்

Jonathan NACKSTRAND / AFP

சுவீடன் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் மாண்டதாய் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரும் அவர்களுள் ஒருவர் என்று அதிகாரிகள் கூறினர்.

சுவீடனின் வரலாற்றில் நடந்த மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அது என்று பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்சன் (Ulf Kristersson) கூறினார்.

தலைநகர் ஸ்டாக்ஹோமின் (Stockholm) மேற்கில் அமைந்துள்ள ரிஸ்பெர்க்ஸ்கா (Risbergska) பள்ளியில் சம்பவம் நடந்தது.

சம்பவத்துக்கான காரணம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. 

சந்தேக நபர் தனித்துச் செயல்பட்டதாய் காவல்துறை கூறியது.
 
சிலர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டோரில் குறைந்தது நால்வருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதாய்த் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்