Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுவீடன்: நேட்டோ கூட்டணியில் சேர நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோர் ஆதரவு

வாசிப்புநேரம் -
சுவீடன் நேட்டோ கூட்டணியில் சேர்வதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்பில் 269 பேர் நேட்டோ கூட்டணியில் சேர்வதற்கு ஒப்புக்கொண்டனர்.
37 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 43 பேர் வாக்களிக்கவில்லை.

30 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோவில் சேர விண்ணப்பித்துள்ள சுவீடன், உள்நாட்டில் ஒப்புதல் பெறுவதற்கு வாக்கெடுப்பை நடத்தியது.

சுவீடனும் பின்லந்தும் இணைந்து விண்ணப்பித்திருந்தன.

ஆனால் அதற்குத் துருக்கியேவும் ஹங்கேரியும் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை.

நேட்டோ கூட்டணியில் சேர்வதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒப்புதல் வழங்கவேண்டும்.

சுவீடனில் இயங்குவதாகக் கூறப்படும் பயங்கரவாதக் குழுவை முதலில் வெளியேற்றவேண்டும் என்று துருக்கியே அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் (Recep Tayyip Erdogan) கேட்டிருக்கிறார்.

அதன் பிறகே சுவீடனின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

ரஷ்யா உக்ரேன் மீது மேற்கொண்ட படையெடுப்பு, பாதுகாப்புக் கவலைகளை ஏற்படுத்தியிருப்பதால் நேட்டோ கூட்டணியில் சேர சுவீடனும் பின்லந்தும் விண்ணப்பித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்