Skip to main content
நீரில் ஒருவர் மூழ்குவதைக் கண்டுபிடிக்கும் AI
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நீரில் ஒருவர் மூழ்குவதைக் கண்டுபிடிக்கும் AI

வாசிப்புநேரம் -
நீரில் ஒருவர் மூழ்குவதைக் கண்டுபிடிக்கும் AI
Unsplash/Thomas Park

ஆஸ்திரேலியாவின் பொது நீச்சல் குளங்களில் உயிர்க்காப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது செயற்கை நுண்ணறிவு.

ஒருவர் மூழ்குவதை முன்கூட்டியே அடையாளம் காணத் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

நீச்சல் குளத்தில் இருப்போரை உயிர்க்காப்பாளர்கள் மட்டுமல்லாமல் 
AI கண்காணிப்புக் கேமராக்களும் கூர்ந்து கவனிக்கின்றன.

கேமராக்களின் அமைப்பில் புதுவிதத் தொழில்நுட்பம் உள்ளது..

அது ஒருவர் எவ்வளவு நேரம் நீருக்கு அடியில் இருக்கிறார் என்பதைக் கவனிக்கிறது.

அதை வைத்து ஒருவர் மூழ்கும் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் அடையாளம் காணப்படுகின்றன.

அறிவார்ந்த கைக்கடிகாரங்கள் மூலம் உயிர்க்காப்பாளர்களுக்கு எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.

தொழில்நுட்பத்தால் பலன் தெரிவதாய் உயிர்க்காப்பாளர்கள் கூறுகின்றனர்.

அதன் மூலம் இதுவரை இரண்டு பேர் காப்பாற்றப்பட்டனர்.

சுமார் 100 நீச்சல் வசதிகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இருந்தபோதும் கவனம் தேவை என்கின்றனர் நிபுணர்கள்.

தொழில்நுட்பத்தால் எந்த ஆபத்தும் நேராது என்ற தவறான நம்பிக்கை ஏற்படலாம் என்கின்றனர் அவர்கள்.

மனிதர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மாற்றாகத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என்கின்றனர் அதை ஆதரிப்போர்.

மாறாக நீச்சல் குளங்களில் சற்றுக் கூடுதல் பாதுகாப்புக் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்