Skip to main content
சுவிட்சர்லந்துத் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சுவிட்சர்லந்துத் தீ - மதுக்கூட உரிமையாளர் தடுப்புக்காவலில்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சுவிட்சர்லந்தின் மதுக்கூடத்தில் புத்தாண்டுக்கு முன்தினம் நடந்த தீச்சம்பவம் தொடர்பில் மதுக்கூடத்தின் உரிமையாளர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

நீதிமன்ற விசாரணை நடக்கவிருக்கிறது. அது தொடங்குவதற்குமுன் அவர் நாட்டிலிருந்து தப்பிச்செல்வதைத் தவிர்க்கத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வாலெய் (Valais) வட்டாரத்தின் தலைமை அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

Le Constellation மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீயில் 40 பேர் மாண்டனர். மேலும் 116 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டன.

மதுக்கூடத்தின் உரிமையாளர்கள் பிரான்ஸைச் சேர்ந்த தம்பதி ஜாக், ஜெஸிக்கா மொரெட்டி (Jacques, Jessica Moretti).

ஜாக் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது மனைவி ஜெஸிக்காவும் துணை நிர்வாகியும் தற்போது சுதந்திரமாக வெளியில் இருக்கின்றனர். எனினும் காவல்துறை அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

உரிமையாளர்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்கு தொடுக்கப்படவிருக்கிறது. அவர்கள் நோக்கமில்லாக் கொலைபுரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்