Skip to main content
10 மில்லியன் மக்கள்தொகை வரம்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

10 மில்லியன் மக்கள்தொகை வரம்பு - பரிந்துரையை நிராகரித்தது சுவிட்ஸர்லந்து

வாசிப்புநேரம் -
10 மில்லியன் மக்கள்தொகை வரம்பு - பரிந்துரையை நிராகரித்தது சுவிட்ஸர்லந்து

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சுவிட்ஸர்லந்து மக்கள், நாட்டின் மக்கள்தொகைக்கு வரம்பு விதிக்க முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நிராகரித்திருக்கின்றனர்.

அது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இன்னும் அனைத்து வாக்குகளும் எண்ணப்படவில்லை. முதற்கட்டக் கணிப்புகளின்படி 55 விழுக்காட்டினர் பரிந்துரைக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர்.

BBC ஊடகம் தகவலை வெளியிட்டது.

குடியேற்றத்தை எதிர்க்கும் வலசாரி சுவிட்ஸர்லந்து மக்கள் கட்சி அந்தப் பரிந்துரையை முன்வைத்தது.

பரிந்துரையைச் சுவிட்ஸர்லந்து மக்கள் ஏற்றிருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்.

பொதுப் போக்குவரத்து, வீடமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் பிரச்சினைகளைத் தவிர்க்க மக்கள்தொகை வரம்பு விதிக்கவேண்டும் என்பது சுவிட்ஸர்லந்து மக்கள் கட்சியின் கருத்து.

ஆனால் மக்கள்தொகைக்கு வரம்பு விதித்தால் பயணத்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றில் போதுமான ஊழியர்களை வேலைக்கு எடுப்பது சிரமமாகும் என்று பலர் அஞ்சினர்.

2002ஆம் ஆண்டில் சுவிட்ஸர்லந்தின் மக்கள்தொகை 7.3 மில்லியனாக இருந்தது. இப்போது அது 9.1 மில்லியன்.
ஆதாரம் : Others/BBC

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்