சுவிட்சர்லந்துத் தீ - மதுக்கூடத்தின் மேலாளர்களிடம் விசாரணை
சுவிட்சர்லந்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது நேர்ந்த தீச்சம்பவத்தின் தொடர்பில் மதுக்கூடத்தின் மேலாளர்களை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
தீ விபத்தில் 40 பேர் மாண்டனர்.
119 பேர் காயமுற்றனர்.
அந்த மதுக்கூடத்தை ஒரு பிரெஞ்சு தம்பதி நடத்துகின்றனர்.
தீ விபத்துக்கு மது போத்தல்களில் இருந்த நெருப்புப் பொறி காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மாண்டோரில் 8 பேர் சுவிட்சர்லந்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
மேலும் மூவர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என்று இத்தாலியத் தூதர் கூறியிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறின.
மாண்டோரில் பலர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அவர்களில் இருவருக்கு 16 வயது என்று கூறப்பட்டது.
மாண்ட அனைவரையும் அடையாளங்காண சில நாள் ஆகலாம் என்று சுவிட்சர்லந்தின் அதிகாரிகள் கூறினர்.
இதுவரை நால்வர் அடையாளம் காணப்பட்டிருப்பதாய்க் காவல்துறை தெரிவித்தது.
சுவிட்சர்லந்தைச் சேர்ந்த இரு பெண்கள், இரு ஆண்களின் சடலங்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.