Skip to main content
சிட்னியில் 3 சுறாமீன் தாக்குதல்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சிட்னியில் 3 சுறாமீன் தாக்குதல்கள் - கடற்கரைகள் மூடப்பட்டன

வாசிப்புநேரம் -
சிட்னியில் 3 சுறாமீன் தாக்குதல்கள் - கடற்கரைகள் மூடப்பட்டன
படம்: Reuters/Jeremy Piper
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிட்னியில் இரண்டு நாளில் 3 சுறாமீன் தாக்குதல்கள் நடந்துள்ளன.

அதன் விளைவாக அங்குள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.

கடைசியாக ஆடவர் ஒருவர் நேற்று (ஜனவரி 19) அலையாடல் செய்துகொண்டிருந்தபோது சுறாமீனால் தாக்கப்பட்டார்.

அந்த ஆடவர் நினைவின்றிக் கிடந்ததாகச் சம்பவத்தைக் கண்டவர் கூறினார். அலையாடல் செய்துகொண்டிருந்த மற்றொருவர் காயத்திலிருந்து ரத்தம் கசிவதை நிறுத்த முயன்றார்.

காயமுற்றவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிட்னியில் கனமழையால் நகரின் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அது சுறாமீன்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.

அலையாடல் செய்வதற்காகக் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்