Skip to main content
சிரியாவைத் தாக்கும் அமெரிக்கா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சிரியாவைத் தாக்கும் அமெரிக்கா

வாசிப்புநேரம் -
சிரியாவைத் தாக்கும் அமெரிக்கா
AP/DVIDS/US Air Force
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைக் குறிவைத்து சிரியா முழுவதும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்கள் பெரிய அளவில் இருந்ததாக அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தாக்குதல் குறிப்பாக எங்கு நடத்தப்பட்டது...தாக்குதலில் யாரும் கொல்லப்பட்டாரா என்பது தெரியவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்க, சிரியப் படைகளுக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு  தாக்குதல் நடத்தியது.

அதில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட் மூவர் மாண்டனர்.

அதற்குப் பதில் நடவடிக்கையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் சொன்னது.

அமெரிக்கப் போர்வீரர்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்கவும், அந்த வட்டாரத்தில் அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் ஆகியவற்றின் படைகளைப் பாதுகாக்கவும் தாக்குதலை மேற்கொண்டதாக அது கூறியது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்