Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மூன்றாவது முறையாக மகுடம் சூடுமா இந்தியா? உலகமே உற்றுநோக்கும் டி20 உலகக்கிண்ணம்!

வாசிப்புநேரம் -
மூன்றாவது முறையாக மகுடம் சூடுமா இந்தியா? உலகமே உற்றுநோக்கும் டி20 உலகக்கிண்ணம்!
படம்: Punit PARANJPE / AFP
கிரிக்கெட் உலகின் மாபெரும் திருவிழாவான டி20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

கோடிக்கணக்கான கண்கள் தொலைக்காட்சியிலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் நேரடியாகவும் அந்த வரலாற்றுத் தருணத்தைக் காணத் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலந்து அணியை எதிர்கொள்கிறது.

போட்டியில் இந்தியா வென்றால், அது மூன்று சாதனைகளை ஒரே நேரத்தில் படைக்கும்,

1) கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொண்ட முதல் அணி.

2) சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற முதல் அணி.

3) 3 முறை டி20 உலகக்கிண்ணத்தை வென்ற முதல் அணி.

சுமார் 130,000 பேர் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி அரங்கம் இன்று நீலக் கடலாகக் காட்சியளிக்கிறது.

20 அணிகள், 55 போட்டிகள் என ஒரு மாதம் நீடித்த இந்தக் கிரிக்கெட் போட்டி இன்று மாலை முடிவுக்கு வருகிறது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்