Skip to main content
சொந்த மண்ணில் அசத்தல்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சொந்த மண்ணில் அசத்தல்! - 3ஆவது முறையாக T20 உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா

வாசிப்புநேரம் -
சொந்த மண்ணில் அசத்தல்! - 3ஆவது முறையாக T20 உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா
Punit PARANJPE / AFP
வெளியீடு : 09 Mar 2026 01:30PM புதுப்பிப்பு : 09 Mar 2026 03:03PM

இந்தியா 3ஆவது முறையாக T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2ஆவது ஆண்டாகத் தக்க வைத்துக்கொண்ட அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றிருக்கிறது. 

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி சொந்த மண்ணில் கிண்ணத்தை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் புரிந்துள்ளது.

இறுதிப்போட்டி நேற்றிரவு குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் போட்டி நடைபெற்றது.

இந்திய அணிக்கு உற்சாகமளிக்க சுமார் 86,000 ரசிகர்கள் அரங்கத்தில் திரண்டனர். 

இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலந்தை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆட்ட நாயகன் விருதை இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா கைப்பற்றினார். 

இதற்குமுன்னர் 2007, 2024ஆம் ஆண்டுகளில் இந்தியா உலகக் கிண்ணத்தை வென்றது.

அடுத்து T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி 2028ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்