Skip to main content
தபேலா இசை மேதை ஸாகீர் ஹுசேன் காலமானார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தபேலா இசை மேதை ஸாகீர் ஹுசேன் காலமானார்

வாசிப்புநேரம் -
தபேலா இசை மேதை ஸாகீர் ஹுசேன் காலமானார்

(படம்: X)

வெளியீடு : 16 Dec 2024 10:25AM புதுப்பிப்பு : 16 Dec 2024 01:10PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகப் புகழ்பெற்ற தபேலா இசை மேதை திரு ஸாகீர் ஹுசேன் காலமானார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் இருக்கும் மருத்துவமனையில் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவருக்கு வயது 73.

நுரையீரல் கோளாற்றால் அவர் உயிரிழந்தார்.

கடந்த இரு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக The Hindu நாளேடு தெரிவித்தது.

இவ்வாண்டின் முதல் பாதியில் அவர் 3 Grammy விருதுகளை வென்றார். மொத்தம் 4 Grammy விருதுகளை வென்ற பெருமை அவரைச் சேரும்.

60 ஆண்டுகளாக தபேலா இசைக் கலைஞராக இருந்தார் திரு ஸாகீர்.

1988இல் இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருதை அவர் பெற்றார். பின்பு 2002இல் அவருக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு (2023) அவர் பத்ம விபூஷன் விருதைப் பெற்றார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்