தைவானை நெருங்கும் சூறாவளி
வாசிப்புநேரம் -

AFP
தைவானை நெருங்கும் கொங்-ரே சூறாவளி வலுப்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கே மணிக்கு 230 கிலோமீட்டர்
வேகத்தில் காற்று வீசுகிறது.
இன்று அது தைவானின் தெங்கிழக்குக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைவானில் கொங்-ரே சூறாவளியால் கனத்த மழை பெய்யக்கூடும்; பலத்த காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலைகள் 6 மீட்டர் வரை உயரக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவை 5 மீட்டர் வரை உயர்ந்துள்ளன.
வெள்ளநீர் 14.5 மீட்டர் வரை உயரும் என்று கூறப்படுகிறது.
ஆகையால் தைவானில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படலாம்.
சில படகுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய வட்டாரங்களில் உள்ள குடியிருப்பாளர்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Others