அமெரிக்காவுடன் உறவு மிகவும் திடமாக உள்ளது: தைவான்
This audio is generated by an AI tool.
அமெரிக்காவுடனான தனது உறவு மிகவும் திடமான ஒன்று எனத் தைவான் கூறியுள்ளது.
அமெரிக்க, சீன அதிபர்களின் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு தைவானிய அதிபர் லாய் சிங் டீ (Lai Ching-te) கருத்துரைத்துள்ளார்.
தைவானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடரும் என்றும் அதில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்காவுடன் வலுவான தொடர்புக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகக் கூறிய திரு லாய் அமெரிக்காவின் கடப்பாட்டில் மாற்றமில்லை என்றார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (Donald Trump) சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) நேற்று (4 பிப்ரவரி) தொலைபேசி வழி உரையாடினர்.
அப்போது திரு சி தைவான் பற்றி பேசினார்.
திரு சி, தைவானுடனான ஆயுத விற்பனையை அமெரிக்கா கவனமாகக் கையாள வேண்டும் என்று திரு டிரம்ப்பிடம் கூறினார்.
சென்ற டிசம்பர் மாதம் டிரம்ப் நிர்வாகம் தைவானுடனான 11.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தை அறிவித்தது.
சீனா தைவானைச் சொந்தம் கொண்டாடுகிறது.
ஆனால் தைவானின் எதிர்காலத்தைத் தைவான் மக்களே முடிவு செய்ய வேண்டும் என்கிறார் அதிபர் லாய்.