Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ண ஆட்டத்தில் தோல்வி... முகத்தில் கண்ணீர்...தென்கொரிய ஆட்டக்காரருடன் படமெடுக்க முயன்ற கானா அதிகாரி சர்ச்சையில்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தென் கொரியா 2-3 என்ற கோல் கணக்கில் கானாவுக்கு எதிராகத் தோல்வியடைந்தது.

அதைத் தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது தென்கொரியா.

அந்த அணியின் தலைவர் சொன் ஹியோங் மின் (Son Heung-min) களத்தில் கண்ணீருடன் காணப்பட்டார்.

அதைக் கண்ட கானா அணியினர் அவருக்கு ஆறுதல் அளிக்க முயன்றனர்.

அப்போது கானா அணியின் அதிகாரி ஒருவர் சொன்னின் தோள் பட்டையைத் தொட்டு... அவருடன் சேர்ந்து Selfie படம் எடுக்க முயன்றார்.

அவ்வாறு செய்வதை நிறுத்தும்படி கானா அணியின் துணைப் பயிற்றுவிப்பாளர் கூறினார்.

சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

படமெடுக்க முயன்றவர் கானா அணியின் பாதுகாவல் அதிகாரி என்று கூறப்படுகிறது.

அவரின் நடத்தை வெட்கக்கேடானது எனறும் மரியாதைக்குரியது அல்ல என்றும் இணையவாசிகள் பலர் சாடினர்.

சிலரோ அவர் selfie எடுக்கத் தேர்ந்தெடுத்த தருணத்தை நகைச்சுவையாகக் கருதினர்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்