Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாலியல் பலாத்கார வழக்கில் தெஹெல்கா நிறுவனர் குற்றவாளி எனத் தீர்ப்பு

வாசிப்புநேரம் -
பாலியல் பலாத்கார வழக்கில் தெஹெல்கா நிறுவனர் குற்றவாளி எனத் தீர்ப்பு

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தெஹெல்கா (Tehelka) சஞ்சிகையின் நிறுவனர் சக ஊழியரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்திய நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.

63 வயது தருண் தெஜ்பால் (Tarun Tejpal) ஒரு நிகழ்ச்சியின்போது சக எழுத்தாளர் ஒருவரை மின்தூக்கியில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

கோவா மாநிலத்தின் 5 நட்சத்திர ஹோட்டலில் அது நடந்ததாகத் தெரியவந்தது.

அந்தச் சம்பவம் 2013ஆம் ஆண்டு நவம்பரில் நடந்தது.

தருண் கைதுசெய்யப்பட்டார்; ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார்.

பின் உச்ச நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவித்தது.

2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தருணைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.

ஆனால் அவரின் விடுதலையை எதிர்த்தது கோவா அரசாங்கம்.

இன்று பாம்பே உயர்நீதிமன்றத்தில் அவருக்குப் பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தருண் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யலாம்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்