Skip to main content
டெய்லர் சுவிஃப்ட் திருமணக் குப்பை ஒவ்வொன்றும் 25 டாலர்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

டெய்லர் சுவிஃப்ட் திருமணக் குப்பை ஒவ்வொன்றும் 25 டாலர்?

வாசிப்புநேரம் -
டெய்லர் சுவிஃப்ட் திருமணக் குப்பை ஒவ்வொன்றும் 25 டாலர்?

படம்: REUTERS

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஒருவரின் குப்பை இன்னொருவருக்குப் புதையலாகத் தெரியலாம்...

குப்பைகளைப் பணம் கொடுத்து வாங்கினர் பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்டின் (Taylor Swift) ரசிகர்கள்.

சென்ற வாரம் சுவிஃப்டின் திருமணம் நியூயார்க் நகரின் மடிசன் ஸ்குவேர் கார்டன் (Madison Square Garden) அரங்கில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

அவர் அமெரிக்கக் காற்பந்து வீரர் டிராவிஸ் கெல்சியை (Travis Kelce) மணமுடித்தார்.

நூற்றுக்கணக்கான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

சுவிஃப்டின் ரசிகர்கள் பலர் அரங்கிற்கு வெளியே கூடினர்.

திருமணத்தை நேரில் தான் காண முடியவில்லை...

அதில் பயன்படுத்தப்பட்ட பொருள் ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கம் அவர்களுக்கு...

அந்த ஏக்கத்தைப் பணமாக்கினார் ஜஸ்டின் ஜிக்னாக் (Justin Gignac) என்பவர்.

திருமணம் நடந்த அரங்கிற்கு வெளியே குப்பைகளைச் சேகரித்து New York City Garbage எனும் இணையப் பக்கத்தில் விற்றார்.

24 மணி நேரத்தில் குப்பைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

தண்ணீர்ப் புட்டிகளின் மூடிகள், சிகரெட்டுத் துண்டுகள், உறிஞ்சுக் குழல் (Straw) எனப் பல பொருள்கள் விற்கப்பட்டன.

சில ரசிகர்கள் 25 வெள்ளி கொடுத்த குப்பையை வாங்கினர்.

நகரில் சேகரிக்கப்படும் மற்ற குப்பைகளையும் அவர் இணையப் பக்கத்தில் விற்கிறார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்