Skip to main content
உதவி ஆசிரியரைக் கத்தியால் குத்திக்கொன்ற மாணவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உதவி ஆசிரியரைக் கத்தியால் குத்திக்கொன்ற மாணவர்

வாசிப்புநேரம் -
பிரான்ஸ்ஸில் மாணவர் ஒருவர் உதவி ஆசிரியரைக் கத்தியால் குத்திக்கொன்றார்.

உதவி ஆசிரியருக்கு வயது 31.

அவர் மாணவர்கள் பள்ளிக்குள் வந்தபோது அவர்களுடைய பைகளைச் சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது மாணவர் அவரைத் தாக்கினார்.

அந்தச் சம்பவத்துக்குப் பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) கண்டனம் தெரிவித்தார்.

"நம் பிள்ளைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உதவி ஆசிரியர் கொடூரமாக உயிரிழந்தார்," என்று அவர் X தளத்தில் பதிவிட்டார்.

நாட்டில் குற்றங்களைக் குறைக்க அரசாங்கம் மும்முரமாகச் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்