Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்புகளில் சீனா உளவு பார்ப்பதாகக் குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்புகளில் சீனா மின்னிலக்க முறையில் உளவு பார்ப்பதாக Microsoft நிறுவனமும் அமெரிக்க வேவுத்துறை அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

சீன அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஊடுருவிகள் தகவல்களைச் சேகரிக்க குவாம் (Guam) உள்ளிட்ட பல இடங்களில் தீங்கு விளைவிக்கும் மென்பொருள்களை நிறுவியிருப்பதாக அவை கூறின.

அமெரிக்க ராணுவத்தளம் அமைந்துள்ள குவாமை ஊடுருவிகள் முக்கியமாகக் குறிவைத்துள்ளனர்.

தைவான் அல்லது தென்சீனக் கடல் பூசலில் அமெரிக்கா ஏதாவது நடவடிக்கை எடுக்க முனைந்தால் குவாம்தான் முக்கியக் களமாக அமையும்.

இதுவரை மின்னியல் தரவு அல்லது சாதனம் ஏதும் சீர்குலைக்கப்படவில்லை என்று Microsoft கூறியது.

ராணுவப் பூசல் நீடிக்கும் சூழலில் வட அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே தொடர்புமுறையில் இடையூறு ஏற்படுத்த ஊடுருவிகள் முயற்சி செய்யலாம் என்று அது எச்சரித்தது.

முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனங்கள் தீங்கு விளைவிக்கும் செயல்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்