Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பெரியளவு வேலை நீக்கம்... ஏன்?

வாசிப்புநேரம் -

அண்மைக் காலங்களில் Google, Microsoft, Amazon, Meta, Twitter, Spotify ஆகிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவிலான பணிநீக்கங்களை அறிவித்தன. 

இதற்கு முக்கிய காரணங்கள் என்ன? கவனிப்பாளர்கள் கூறுவது....

  • COVID-19 காலக்கட்டத்தில் தேவைக்கு மீறி ஊழியர்களை வேலையில் சேர்த்தது...

கிருமிப்பரவல் தொடங்கியபோது மக்கள் இணையச் சேவைகளை அதிகம் நாடவேண்டியிருந்தது.

அதனால் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கிய சேவைகள் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தன. அவற்றை உருவாக்கவும் அறிமுகம் செய்யவும் அதிகளவில் ஊழியர்கள் தேவைப்பட்டனர்.

அந்தச் சேவைகள் இப்போது வழக்கநிலைக்கு வந்துவிட்டதால் அதிகமான ஊழியர்களுக்கு அவசியம் இல்லை. 

  • முதலீட்டாளர்கள் கோரிக்கை...

தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி மெதுவடைந்துள்ளது. அதை எப்படியாவது சீராக்கும்படி முதலீட்டாளர்கள் நெருக்குகின்றனர். 

அதற்கு ஆட்குறைப்பு அவசியம் எனச் சில நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

  • தொழில்நுட்பத் துறை முதிர்ச்சி

கடந்த 30 ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறை நன்கு வளர்ச்சி கண்டுள்ளது.

அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்த துறையில் ஆட்குறைப்பு இடம்பெறுவது துறையின் முதிர்ச்சிக்கு அறிகுறி என்கின்றனர் நிபுணர்கள். 

  • பொருளியல் மந்தநிலை அச்சம்

சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள் விரைவில் பொருளியல் மந்தநிலை ஏற்படக்கூடும் என்று  அஞ்சுகின்றனர். 

அதிலிருந்து நிறுவனத்தைப் பாதுகாக்க இப்போதே பணி நீக்கங்களை அறிவித்துவிட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்