Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிட்னி தீ விபத்து - 2 சிறுவர்கள் காவல்துறையிடம் சரண்

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 7 மாடிக் கட்டடம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் 13 வயதுடைய
2 சிறுவர்கள் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்.

தொப்பித் தொழிற்சாலையாக இருந்த அந்தப் பாரம்பரியக் கட்டடம் அண்மைக் காலத்தில் காலியாகக் கிடந்தது.

அதில் வியாழக்கிழமை (25 மே) தீப்பற்றியது. பக்கத்திலிருந்த கட்டடங்களுக்கும் தீப்பரவியது. இதனால் பெருமளவில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

சம்பவ இடத்திலிருந்து இளவயதுக் கும்பலொன்று தப்பி ஓடியதாகச் சிட்னி காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதே நாள் இரவு 13 வயதுச் சிறார்கள் இருவர் வெவ்வேறு காவல்நிலையங்களுக்குச் சென்று சரணடைந்தனர்.

சம்பவம் குறித்து சிறுவர்களிடம் விசாரிக்கப்படுகிறது.

அதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மேலும் 3 அல்லது 4 சிறுவர்களை முன்வந்து நடந்ததை விவரிக்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டது. 

தீச்சம்பவத்தில் கட்டடத்தின் மேல்பகுதி முற்றிலுமாக அழிந்து இடிந்துவிழுந்தது. அதிலிருந்து கிளம்பிய புகை சிட்னி முழுக்கப் பரவியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்