Telegram செயலி இனி மலேசியாவில்...

REUTERS/Dado Ruvic/Illustration
மலேசியாவில் Telegram செயலிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸி (Fahmi Fadzi) தெரிவித்திருக்கிறார்.
ஜனவரி 2ஆம் தேதியன்று உரிமம் வழங்கப்பட்டதாக The Star செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மலேசியாவில் இணையத் தொடர்பு, சமூக ஊடகச் சேவைகளை வழங்கும் மூன்றாம் நிறுவனம் Telegram.
Facebook, Instagram, WhatsApp செயலிகளின் உரிமையாளரான Meta, உரிமத்தைப் பெற ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பணியைத் தற்போது மேற்கொள்வதாக அமைச்சர் சொன்னார்.
மலேசியாவில் WeChat செயலியை நிர்வகிக்கும் Tencent, TikTok செயலியை நிர்வகிக்கும் ByteDance நிறுவனங்களுக்கு ஏற்கனவே உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.