Skip to main content
பிரேசிலை வதைக்கும் அனல்காற்று
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசிலை வதைக்கும் அனல்காற்று

வாசிப்புநேரம் -
பிரேசில் ரியோ டி ஜெனிரோவை (Rio de Janeiro) வழக்கத்திற்கு மாறான அபாயகரமான அனல்காற்று வதைத்து வருகிறது.

எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கச் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் அயராது போராடி வருகின்றனர்.

ரியோ டி ஜெனிரோவில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிட்டது.

குடியிருப்பாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலால் அவதியுறுகின்றனர்.

வெப்பத்தை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் திண்டாடுகின்றனர்.

வசதி குறைந்த பகுதிகளில் வசிக்கும் மூத்தோர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்குத் தாதியர் முன்னுரிமை வழங்கி வருகின்றனர்.

ஒதுக்குப்புறமான இடங்களில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கத் தாதியர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி இல்லை. சில இடங்களில் மின்சாரமும் போதுமான குடிநீரும்கூட இல்லை என்று உதவிப் பணியில் ஈடுபட்டுள்ள தாதியர் கூறுகின்றனர்.

மக்கள் சொந்தமாகத் தண்ணீர்க் குழாய்களையும் தற்காலிகக் குளங்களையும் உருவாக்கி வெப்பத்தை எதிர்கொள்ள முனைகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்