Skip to main content
மரண தண்டனை முயற்சி தோல்வி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மரண தண்டனை முயற்சி தோல்வி - கைதி மருத்துவமனையில்

வாசிப்புநேரம் -
மரண தண்டனை முயற்சி தோல்வி - கைதி மருத்துவமனையில்

(படம்: Handout / TENNESSEE DEPARTMENT OF CORRECTION / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவில் மரண தண்டனை தோல்வியில் முடிந்ததால் கைதி கிறிஸ்டா பைக் (Christa Pike) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த அந்த 50 வயதுப் பெண்ணின் மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படவிருந்தது.

சுமார் 200 ஆண்டுகளில் டென்னசியில் நச்சு மருந்து செலுத்தி உயிரிழக்கவிருந்த முதல் பெண் அவரே.

அவருக்கு pentobarbital எனும் நச்சு மருந்து ஊசி இரண்டு முறை போடப்பட்டது.

ஆனால் அவர் உயிரிழக்கவில்லை. அவரது நிலை என்னவென்றும் தெரியவில்லை.

அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு பைக் தனது காதலருடன் சேர்ந்து 19 வயதுப் பெண்ணை அடித்துக் கொலை செய்தார்.

அப்போது அவருக்கு 18 வயது.

அந்தக் குற்றத்திற்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சிறு வயது, அப்போது அவருக்கு இருந்த மனநலப் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பைக்கிற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் கோரினர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்