Skip to main content
கிறிஸ்டா பைக் விவகாரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கிறிஸ்டா பைக் விவகாரம் - டென்னஸி சிறைச்சாலைத் தலைவர் பதவி விலகல்

வாசிப்புநேரம் -
கிறிஸ்டா பைக் விவகாரம் - டென்னஸி சிறைச்சாலைத் தலைவர் பதவி விலகல்

படம்: AP/George Walker IV

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க மாநிலம் டென்னஸியில் (Tennessee) குற்றவாளி கிறிஸ்டா பைக்குக்கு (Christa Pike) மரண தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதால் மாநிலச் சிறைச்சாலைத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.

அதை மாநிலை ஆளுநர் பில் லீ (Bill Lee) தெரிவித்தார்.

பைக்குக்கு இரண்டு முறை நச்சு ஊசி செலுத்தப்பட்டது.

இரண்டு முறையும் அவர் உயிர் பிழைத்தார்.

தற்போது பைக் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

அவர் செயற்கை சுவாசக்கருவியை நம்பியிருப்பதாக அவருடைய வழக்கறிஞர்கள் கூறினர்.

இவ்வாண்டு டென்னஸியில் தோல்வியடைந்த இரண்டாவது மரண தண்டனை இது.

மே மாதத்தில் வேறொருவருக்கு நச்சு ஊசியைச் செலுத்துவதற்கு முன்னர் மருத்துவ அதிகாரி சம்பந்தப்பட்டவரின் நரம்பைத் தட்டத் தவறியதால் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

நச்சு ஊசி பைக்கின் உயிரைப் பறித்திருந்தால் 200 ஆண்டுகளில் டென்னஸியில் மரண தண்டனைக்கு ஆளான முதல் பெண் கைதி ஆகியிருப்பார்.

அமெரிக்காவில் 1976ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 18 பெண்களுக்கு மட்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்