Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இரண்டாவது டென்னிஸ் வீரரைத் தடுத்துவைத்துள்ள ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியப் பொதுவிருதில் கலந்துகொண்ட செக் குடியரசு டென்னிஸ் வீரர் ரெனாட்டா வொராகோவாவை (Renata Voracova) ஆஸ்திரேலியா தடுத்துவைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
இரண்டாவது டென்னிஸ் வீரரைத் தடுத்துவைத்துள்ள ஆஸ்திரேலியா

(படம்: MIGUEL MEDINA AFP/File)

ஆஸ்திரேலியப் பொதுவிருதில் கலந்துகொண்ட செக் குடியரசு டென்னிஸ் வீரர் ரெனாட்டா வொராகோவாவை (Renata Voracova) ஆஸ்திரேலியா தடுத்துவைத்துள்ளது.

நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) போலவே COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதிலிருந்து மருத்துவரீதியாக விலக்களிக்கப்பட்டோர் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இரட்டையர் ஆட்டத்தில் சிறந்து விளங்கும் ரெனாட்டா வொராகோவா இவ்வாரத் தொடக்கத்தில் மெல்பர்னில் விளையாடினார்.

எல்லைப் படை அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டபிறகு அவர் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

அந்த முடிவிற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

டென்னிஸ் வீரர் ரெனாட்டா, ஜோக்கோவிச் போன்ற பல வீரர்களுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று செக் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் உறுதி செய்துள்ளது.

கான்பராவில் உள்ள அதன் தூதரகத்தின்மூலம் அதற்கான விளக்கத்தைக் கேட்டுள்ளது அமைச்சு.

பயிற்சிக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் ரெனாட்டா போட்டியிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவை விட்டுச்செல்ல முடிவு செய்துள்ளார்.

ஜோக்கோவிச் தடுத்துவைக்கப்பட்டுள்ள அதே ஹோட்டலில் ரெனாட்டா தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார். 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்