இலோன் மஸ்க்கின் சம்பளம் $1000 பில்லியன் அதாவது $1 டிரில்லியன்
(படம்: Reuters)
Tesla பங்குதாரர்கள் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் (Elon Musk) சம்பளத்தைக் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலருக்கு (சுமார் 1.3 டிரில்லியன் வெள்ளி) உயர்த்த இணங்கியிருக்கின்றனர்.
அடுத்த பத்தாண்டில் அந்தச் சம்பளத்தை அவர் பெறுவார்.
வரலாற்றில் ஆக அதிகச் சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் இருப்பார்.
உடன்பாட்டின்படி அவருக்குச் சுமார் 900 பில்லியன் டாலர் (சுமார் 1.17 டிரில்லியன் வெள்ளி) தரப்படும்.
Tesla பங்குதாரர்களில் 75 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் அதை ஆதரித்தனர்.
Tesla நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 1.1 டிரில்லியன் டாலர் (சுமார் 1.4 டிரில்லியன் வெள்ளி). அதை 8.5 டிரில்லியன் டாலருக்கு (சுமார் 11 டிரில்லியன் வெள்ளி) உயர்த்தினால்தான் அந்தச் சம்பளம்.
அந்த இலக்கை அவர் எட்டினால் Meta, Microsoft, Alphabet ஆகிய 3 நிறுவனங்களின் கூட்டு மதிப்பைவிட Tesla நிறுவனத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.