Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எப்படி நொடித்துப்போகாமல் இருப்பது? - Teslaவின் ஆகப்பெரிய கவலை

வாசிப்புநேரம் -

Tesla நிறுவனத்தின் புதிய கார் தொழிற்சாலைகள் பல பில்லியன் டாலர் இழப்பிற்கு ஆளாகியுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மின்கலப் பற்றாக்குறை, சீனாவில் துறைமுகப் பிரச்சினைகள் ஆகியவற்றால் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையிலும் ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள தொழிற்சாலையிலும் தயாரிப்பை அதிகரிக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

சீனாவின் ஷங்ஹாய் நகரில் நடப்பிலுள்ள COVID-19 முடக்கநிலையால் அங்குள்ள தொழிற்சாலையில் கார் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஈராண்டில் விநியோக இடையூறுகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தலைதூக்கியுள்ளதாகத் திரு. மஸ்க் சொன்னார்.

தற்போது எப்படித் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்துவது? நொடித்துப்போகாமல் இருப்பது? என்பதே Tesla நிறுவனத்தின் ஆகப் பெரிய கவலை என்று அவர் கூறினார்.

Tesla ஊழியர்களில் 10 விழுக்காட்டினரைப் பணிநீக்கம் செய்யப்போவதாகத் திரு. மஸ்க் இம்மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்