அமெரிக்க வெள்ளம் - 25 பிள்ளைகளைக் காணவில்லை

AP Photo
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24க்கு உயர்ந்திருக்கிறது.
25 பிள்ளைகளைக் காணவில்லை.
அவர்களைத் தேடி மீட்கும் பணி மும்முரமாய்த் தொடர்கிறது.
டெக்சஸின் தென் மத்திய வட்டாரத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.
அங்குள்ள குவாடலுப்பே (Guadalupe) ஆறு கோடை முகாம்களுக்குப் பெயர்பெற்றது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் அங்கு செல்வதுண்டு.
Camp Mystic கோடை விடுமுறை முகாமில் இம்முறை 700க்கும் அதிகமான பிள்ளைகள் இருந்தனர்.
முக்கால் மணி நேரத்தில் குவாடலுப்பே ஆற்றின் நீர்மட்டம் 26 அடி உயர்ந்ததால் திடீரெனப் பெருவெள்ளம் ஏற்பட்டது.
பிள்ளைகள் தங்கியிருந்த கூடாரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அதிகாலைக்குச் சற்று முன்னர் திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் பிள்ளைகளை வெளியேற்ற இயலாமல் போனது.